தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தங்கவயல் மாணவர்களின் மாதிரி இளைஞர் லோக்சபா

தங்கவயல் மாணவர்களின் மாதிரி இளைஞர் லோக்சபா

தங்கவயல் மாணவர்களின் மாதிரி இளைஞர் லோக்சபா


UPDATED : நவ 07, 2026 01:37 AM

ADDED : நவ 07, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 01:37 AM ADDED : நவ 07, 2026 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்:
சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி தங்கவயல் மாணவர்கள், மாதிரி இளைஞர் லோக்சபா நிகழ்ச்சியை நடத்தினர்.

ராபர்ட்சன்பேட்டையில் உள்ள பகவான் ஸ்ரீ மஹாவீர் ஜெயின் கல்லுாரியில், சர்வதேச ஜனநாயக தினம் - 2026யை முன்னிட்டு, தங்கவயல் தாலுகா நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை ஆகியவை இணைந்து, தாலுகா அளவிலான இளைஞர் லோக்சபா நிகழ்ச்சியை நடத்தினர்.

பார்வையாளர் மாடத்தில் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, இளைஞர்களின் லோக்சபா நிகழ்வுகளை பார்வையிட்டார்.

அவர் பேசுகையில், 'மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற மாதிரி லோக்சபா நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்களை பங்கேற்கச் செய்வதன் மூலம் இளைஞர்களிடம் தலைமைப் பண்புகளை வளர்க்க முடியும்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us