UPDATED : ஆக 26, 2024 12:00 AM
ADDED : ஆக 26, 2024 10:19 AM
தர்மபுரி:
டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அரசு அருங்காட்சியகத்தில், பழங்கால கல்வெட்டு, நாணயம், ஆயுதம் உள்ளிட்ட ஏராளமானவை வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை, மாவட்டம் முழுவதுமிருந்து, ஏராளமான பள்ளி மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் களப்பயணமாக வந்து பார்த்து செல்கின்றனர். கல்வெட்டுகளை நேரடியாக கவனிக்கும் மாணவர்கள், அவற்றை தெளிவுடன் புரிந்து கொள்கின்றனர். நேற்று, தர்மபுரி அடுத்த ஏ.கொல்லஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்களை தலைமை ஆசிரியை சசிரேகா, களப்பயணமாக இந்த அருங்காட்சியகத்துக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது அவர்களுக்கு அங்கிருந்த கல்வெட்டு மற்றும் பழங்கால ஆயுதம், மண் குடுவை உள்ளிட்டவைகளை காட்டி வகுப்பு நடத்தினார். பட்டதாரி ஆசிரியர் முனிராஜ் உடனிருந்தார்.