தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலை.,யில் 17 நாட்டு மாணவர்கள்

பாரதியார் பல்கலை.,யில் 17 நாட்டு மாணவர்கள்

பாரதியார் பல்கலை.,யில் 17 நாட்டு மாணவர்கள்


UPDATED : ஆக 27, 2026 07:44 PM

ADDED : ஆக 27, 2026 07:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 07:44 PM ADDED : ஆக 27, 2026 07:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலை.,யில் 38 துறைகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் 2,434 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், நடப்பு கல்வியாண்டில் மட்டும் 1,618 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை 1,472 ஆக இருந்தது. இந்தாண்டு 146 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். இதேபோல், நடப்பு கல்வியாண்டில் 816 பேர் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளனர்.

ஆக., 1 நிலவரப்படி, 33 மாணவர்கள், 32 மாணவியர் என 65 சர்வதேச மாணவர்கள் 19 துறைகளில் கல்வி, ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை, தான்சானியா, மடகாஸ்கர், ஈராக், கென்யா, எத்தியோப்பியா, சிரியா, இந்தோனேசியா, உகாண்டா, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்பட 17 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலையில் படிக்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us