sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காலாண்டு விடுமுறைக்கு புத்தகங்களை தேட... புத்தகத்திருவிழாவில் குவியும் மாணவர்கள்

/

காலாண்டு விடுமுறைக்கு புத்தகங்களை தேட... புத்தகத்திருவிழாவில் குவியும் மாணவர்கள்

காலாண்டு விடுமுறைக்கு புத்தகங்களை தேட... புத்தகத்திருவிழாவில் குவியும் மாணவர்கள்

காலாண்டு விடுமுறைக்கு புத்தகங்களை தேட... புத்தகத்திருவிழாவில் குவியும் மாணவர்கள்


UPDATED : அக் 01, 2024 12:00 AM

ADDED : அக் 01, 2024 10:43 AM

Google News

UPDATED : அக் 01, 2024 12:00 AM ADDED : அக் 01, 2024 10:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:
காலாண்டு விடுமுறை துவங்கியுள்ள நிலையில் விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை தேடி, படிக்கும் ஆர்வத்தை பெருக்க மாணவர்கள் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனது நுாலகமே எனக்கு போதிய பெரும் செல்வம், என்கிறார் ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியர். நான் படிக்காத ஒரு புத்தகத்தை கொடுக்கும் நபர், எனக்கு சிறந்த நண்பர், என ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார். உள்ளத்தையும், மனதையும் மாற்றி, அறிவை கூராக்கும் சிந்தனைகள் புத்தகங்களில் ஏராளம் உள்ளன. சமூகத்தை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும் அச்சாணிகளாக புத்தகங்கள் உள்ளன.

இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த புத்தகங்களை புதியதாக வருவோருக்கு அறிமுகப்படுத்தவும், அறிமுகமானவர்கள் இன்னும் நெருக்கமாகி உறவாடவும் விருதுநகர் மதுரை ரோடு கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 2ம் நாளான நேற்று காலாண்டு விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் குவிந்தனர். ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களிடம் புத்தக உண்டியல் கொடுக்கப்பட்டுள்ளதால் இம்முறை புத்தகங்களை வாங்குவதில் மாணவர்களின் பங்களிப்பும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் ஸ்டால்


தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஸ்டாலில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆன்மிகம், அறிவியல், தத்துவம், புனைவு கதைகள் தொடர்பாக புத்தகங்கள் உள்ளன. செப். 27 முதல் அக். 7 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது.

அனுமதி இலவசம். சிறுவர்களுக்கான முப்பரிமாண அரங்கம், விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. வனத்துறை கண்காட்சி நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், 6:00 மணிக்கு மேல் சிறப்பு பேச்சாளர்களும் பேசுகின்றனர். பபாசி, மாவட்ட நிர்வாகம், பொது நுாலகத்துறை இணைந்து ஏற்பாடுகளை செய்கிறது.

புத்தகத்திருவிழாவில் தேடி வாங்கிய புத்தகங்கள் குறித்து வாசகர்கள் கூறியதாவது:

புனைவு கதைகள் படிக்க விருப்பம்



எம்.ஆர்.யமுனா, அருப்புக்கோட்டை: வழக்கமாக கட்டுரை புத்தகங்கள் தான் படிப்பேன். இந்த முறை புத்தகத்திருவிழாவில் நாவல், புனைவு கதைகளை தேர்ந்தெடுக்க ஆர்வமாக உள்ளேன். கேரள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் புத்தகத்தை வாங்கியுள்ளேன். கவிதை புத்தகங்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன். தமிழில் மட்டும் தான் இலக்கிய செழுமை உள்ள நிறைய புத்தகங்களை பார்க்க முடியும். இன்னும் நிறைய படிக்க விரும்புகிறேன்.

ஆளுமைகளாக மாற்றும்


க.பால்பாண்டி, காரியாபட்டி: குழந்தைகளுக்கு தேவையான எழுத்து புத்தகங்களை வாங்க வந்தேன். அப்படியே எனக்கும் தேவையான பணம்சார் உளவியல் புத்தகத்தை வாங்கி உள்ளேன். வாசிப்பும், படிக்கும் ஆர்வமும் தான் மனிதனை வளமிக்க ஒருவராக மாற்றும். அவர்களை நல்ல ஆளுமைகளாக மாற்றி சமூகத்திற்கு பயன்பட வைக்கும். அன்று படித்து சான்றோர் ஆனவர்களை தான் இன்றும் நாம் பின்பற்றி முன்னே செல்கிறோம்.

சஸ்பென்ஸ் புத்தகங்கள் படிக்கும்


அம்பரீஷ், சாத்துார்: சஸ்பென்ஸ் த்ரில்லர் புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எழுத்தாளர் சுஜாதாவின் கிரைம் திரில்லர்கள் என்றால் தனி விருப்பம். இது போன்ற புத்தகங்களை வாசிப்பதன் மூலம் ஒரு திரைப்படத்தை மனதில் ஓட்டி பார்த்தது போன்ற கற்பனை வளம் பெருகுகிறது. இது ஒரு விதத்தில் மனநிறைவையே தருகிறது. இன்னும் நிறைய புத்தகங்களை வாசிக்க விரும்புகிறேன்.

தேர்வுக்கு உதவுகின்றன


டி.ஹரிஹரன், விருதுநகர்: நான் குரூப் 1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அடுத்தகட்ட படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். இவை தவிர காவல்கோட்டம், குற்றப்பரம்பரை, கருவாச்சி காவியம் போன்ற புத்தகங்களையும் வாங்க வந்துள்ளேன். போட்டி தேர்வுக்கு தயாராகும் அதே நேரம் மனதுக்கு இதமாக கற்பனை புனைவு புத்தகங்களையும் படிப்பது தேர்வு எழுதும் போது உதவி செய்யும் என நம்புகிறேன்.

புத்தகத்திருவிழா அரங்கு 88ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 ரொக்கம் அல்லது ஆன்லைன் அல்லது காசோலை மூல் செலுத்தினால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை தேர்வு செய்து இலவசமாக பெற்று கொள்ளலாம். அங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு.






      Dinamalar
      Follow us