தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி மாணவர்கள் மாரத்தான் ஓட்டம்

100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி மாணவர்கள் மாரத்தான் ஓட்டம்

100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி மாணவர்கள் மாரத்தான் ஓட்டம்


UPDATED : ஏப் 21, 2026 02:53 PM

ADDED : ஏப் 21, 2026 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2026 02:53 PM ADDED : ஏப் 21, 2026 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்:
100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் சூலூரில் நடந்தது.

வரும், ஏப்., 23ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காடாம்பாடி எம்.டி.என்., பியூச்சர் பள்ளி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.

சூலூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை, இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் துவக்கி வைத்தார்.

கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனர் பாரதி, 100 சதவீத ஓட்டுப்பதிவு ஏன் வேண்டும், என, விளக்கினார். முக்கிய பகுதிகள் வழியாக நடந்த மாரத்தான் ஓட்டம் பள்ளியில் நிறைவு பெற்றது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் ராம சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் சீனிவாசன், துணை முதல்வர் கவுசல்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us