UPDATED : ஏப் 10, 2024 12:00 AM
ADDED : ஏப் 10, 2024 10:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
ஜே.இ.இ., முதன்மை தேர்வெழுதவுள்ள, அரசு பள்ளியில் படிக்கும் 22 மாணவர்கள், சென்னையில் சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.
ஐ.ஐ.டி., போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஜே.இ.இ., முதல் நிலைத்தேர்வை பிளஸ் 2 மாணவர்கள் பலர் எழுதினர். இதில், தேர்வு செய்யப்பட்ட முதன்மை தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி கல்வித்துறையால் வழங்கப்படுகிறது. மே மாதம்,23ம் தேதி வரை தங்கும் வசதியுடன் பயிற்சியளிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இப்பயிற்சிக்கு, 22 மாணவர்கள் சென்றுள்ளனர்.