தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு


UPDATED : ஜூலை 20, 2026 03:25 PM

ADDED : ஜூலை 20, 2026 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 03:25 PM ADDED : ஜூலை 20, 2026 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கை முறையை வலியுறுத்தி, பிரைம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். கடற்கரை சாலை காந்தி சிலையில் துவங்கிய ஊர்வலம், பிரெஞ்சு துணை துாதரகத்தில் நிறைவடைந்தது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் குப்பைகளை முறையாகப் பிரித்தல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாடு முழுதும் நடைபயணம்


உத்திர பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் அயன் பானர்ஜி, கருணா பாதயாத்திரை என்ற பெயரில் 7,000 கி.மீ., தொலைவு கொண்ட தேசிய நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி அவர் இந்த பயணத்தை மேற்கு வங்கத்தில் துவக்கினர்.

இது வரை மூன்று மாநிலங்களில் 2,800 கி.மீ.,க்கும் அதிகமான துாரத்தை அவர் கடந்துள்ளார். புதுச்சேரியில் நடந்த ஊர்வலத்தில் அவரும் பங்கேற்று பொதுமக்களுக்கு விதைகளை வழங்கினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us