தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களிடையே விமர்சன சிந்தனை அனுபவக் கற்றலையும் வளர்க்க வேண்டும்: துணைவேந்தர் பிரகாஷ்பாபு வேண்டுகோள்

மாணவர்களிடையே விமர்சன சிந்தனை அனுபவக் கற்றலையும் வளர்க்க வேண்டும்: துணைவேந்தர் பிரகாஷ்பாபு வேண்டுகோள்

மாணவர்களிடையே விமர்சன சிந்தனை அனுபவக் கற்றலையும் வளர்க்க வேண்டும்: துணைவேந்தர் பிரகாஷ்பாபு வேண்டுகோள்


UPDATED : செப் 04, 2026 04:45 PM

ADDED : செப் 04, 2026 04:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 04:45 PM ADDED : செப் 04, 2026 04:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 16-வது ஆசிரியத் துாண்டல் திட்டம் துவங்கியது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் யு.ஜி.,சி-மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம் சார்பில், புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கான 16-வது ஆசிரியத் துாண்டல் திட்டம் துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கினார்.

பயிற்சித் திட்டத்தை புதுச்சேரி அரசின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறைச் செயலர் தமுகமது அகசன் அபித், துவக்கி வைத்து பேசும்போது, உயர்கல்வியின் மாறும் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர்கள் பல்துறைக் கற்றலை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாரம்பரிய கற்பித்தல் முறையிலிருந்து விலகி, வகுப்பறைகளை உரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் நிறைந்த ஊடாடும் கற்றல் சூழலாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேசியதாவது:

தேசிய கல்விக் கொள்கை இந்திய உயர்கல்வியை முழுமையான, பல்துறை மற்றும் திறன் சார்ந்த ஒன்றாக மறுவடிவமைக்கிறது. குறிப்பாக ஆசிரியர்களை வெறுமனே பாடம் நடத்துபவர்களாக அல்லாமல், வழிகாட்டிகளாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் நிலைநிறுத்துகிறது. இந்திய அறிவு அமைப்புகள் மற்றும் நெறிமுறைகளை நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்து, மாணவர்களிடையே விமர்சன சிந்தனையையும் அனுபவக் கற்றலையும் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு துணைவேந்தர் பேசினார்.

பயிற்சி மையத்தின் இயக்குநர் அருள், பாடநெறி ஒருங்கிணைப்பாளர் ஸ்ருஜனா கதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 29ம் தேதி வரை ஆசிரியர்களுக்கான துாண்டல் பயிற்சி திட்டம் தொடர்ந்து நடக்கின்றது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us