sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவியர் தற்காப்பு கலை கற்றுக்கணும்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை

/

மாணவியர் தற்காப்பு கலை கற்றுக்கணும்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை

மாணவியர் தற்காப்பு கலை கற்றுக்கணும்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை

மாணவியர் தற்காப்பு கலை கற்றுக்கணும்! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை


UPDATED : டிச 14, 2024 12:00 AM

ADDED : டிச 14, 2024 11:30 AM

Google News

UPDATED : டிச 14, 2024 12:00 AM ADDED : டிச 14, 2024 11:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட சமூக நல அலுவலர் கூறினார்.

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பெண்கள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.

கோவை, கல்லுாரி கல்வி இயக்ககம், இணை இயக்குனர் கலைச்செல்வி பேசியதாவது:



பள்ளி, கல்லுாரி காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புக்களை மாணவியர் நன்கு உணரவேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் ஆண் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். கல்லுாரிக்கு நாள் தோறும் வருகிறார்களா என கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் தவறு செய்ய பெற்றோர்கள் காரணமாக இருக்க கூடாது. கல்லுாரி சென்று வீடு திரும்பும் குழந்தைகளிடம், 10 நிமிடமாவது மனம் விட்டு பேச வேண்டும். இதன் வாயிலாக தவறுகள் நடக்காமல் கண்காணிக்க முடியும்.

இவ்வாறு, பேசினார்.

மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா பேசியதாவது:


பெண் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் வன்கொடுமை சட்டத்திலிருந்து பாதுகாக்க, மாணவியர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மாணவனிடம் நட்பு கொள்ளலாம், ஆனால் அதுவே காதலாக மாறிவிடக்கூடாது. பாலியல் ரீதியாக யாரேனும் சீண்டினால் பெற்றோர்கள், கல்லுாரி நிர்வாகம், தோழிகளிடம் தெரிவிக்கலாம்.

உங்களை பாதுககாப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்து, தவறுகளை அவ்வப்போது தட்டி கேட்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, மாணவியர் தற்காப்புக்கலைகளை கற்றுக்கொள்வது மிக அவசியம்.

இவ்வாறு, பேசினார்.

நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் ரகுராமன், அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் மகேஸ்ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ேஷாபனா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us