UPDATED : நவ 20, 2025 07:46 AM
ADDED : நவ 20, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின், போதைப்பொருள் இல்லாத சமுதாய விழிப்புணர்வு பிரசாரத்தின் 5ம் ஆண்டு நிகழ்வு, கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வையொட்டி, கோவை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் ஜி.ஆர்.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் பயன்பாட்டிற்கெதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்டகல்வி அலுவலர் பரமசிவம் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், ஜி.ஆர்.ஜி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சரவணன், பரிமளாகாந்தி, சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். இந்நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கெதிரான, உறுதி மொழி ஏற்றுகொண்டனர்.

