UPDATED : ஜூன் 17, 2026 08:09 PM
ADDED : ஜூன் 17, 2026 08:10 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சித்ரா உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.
இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்.
அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும்; குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றிட சமுதாயத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனக்கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
