UPDATED : அக் 28, 2025 08:16 AM
ADDED : அக் 28, 2025 08:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி பள்ளிகளில், 'சிறார் திரைப்பட மன்றம்', துவக்கப்பட்டுள்ளது.
இம்மன்றத்தின் சார்பில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி ஒரு சிறந்த குழந்தைகள் திரைப்படம் திரையிடப்படுகிறது.
அவ்வகையில், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'குரங்கு பெடல்' என்ற தமிழ் சிறார் திரைப்படம் திரையிடப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் விஜயா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்; 250 மாணவியர் திரைப்படத்தை பார்த்தனர். மாணவர்களிடம் கலந்துரையாடல் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழாசிரியர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

