UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:37 AM

பந்தலுார்:
பந்தலுார் அருகே பொன்னுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு நிறைவு பெற்ற நிலையில் தாங்கள் படித்த பள்ளியில் பொது சேவை செய்ய முடிவு செய்தனர்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தை சுற்றிலும் புதர்கள் வெட்டி அகற்றப்பட்டு, குப்பைகள் அனைத்தையும் எடுத்து பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் கடந்த ஓராண்டாக பள்ளியில் எந்த பொது சேவையிலும் ஈடுபட இயலவில்லை.
தேர்வு முடிந்து வீட்டில் இருக்கும் நிலையில் பள்ளியை துாய்மைப்படுத்த நினைத்து இந்த பணியில் ஈடுபட்டோம்,' என்றனர்.
மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ரகு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.