தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு எழுத உதவிக்கரம் நாடும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்

தேர்வு எழுத உதவிக்கரம் நாடும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்

தேர்வு எழுத உதவிக்கரம் நாடும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்


UPDATED : அக் 24, 2026 12:06 PM

ADDED : அக் 24, 2026 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:06 PM ADDED : அக் 24, 2026 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஸ்கிரைப், கூடுதல் நேரம் உதவி கேட்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் 271 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றை சிறப்பாசிரியர்கள் சரிபார்த்தனர்.

நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு 17ம் தேதியும் துவங்குகிறது. ஸ்கிரைப் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

திருப்பூரில் பத்தாம் வகுப்பில் 183 பேர், பிளஸ் 2வில் 88 பேர் என மொத்தம் 271 பேர் விண்ணப்பித்துள்ளனர். கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பரிசீலனை நடந்தது. தேர்வுகள் துறை மாவட்ட உதவி இயக்குனர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.

65 சிறப்பாசிரியர்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தனர். அவர்களின் பரிந்துரை அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தேர்வில் உரிய உதவிகள் செய்து தரப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us