எதிர்கால டிரென்டிங்கை கணிப்பு செய்து படிக்கலாம்: சோகோ இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி பேச்சு
எதிர்கால டிரென்டிங்கை கணிப்பு செய்து படிக்கலாம்: சோகோ இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி பேச்சு
UPDATED : ஏப் 06, 2026 05:17 PM
ADDED : ஏப் 06, 2026 05:23 PM

புதுச்சேரி:
'எதிர்காலத்தில் எது 'டிரென்டிங்' முன் கணிப்பு செய்ய வேண்டும்,' என சோகோ கார்ப்பரேஷன் டெக்னாலஜி இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி பேசினார்.
புதுச்சேரியில் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இளமையில் மிக முக்கியமான வருடங்களில், தத்துவங்களை உருவாக்க வேண்டும். அடக்கம் என்பது மிகவும் முக்கியம். மதிப்பெண், திறமையைக் காட்டிலும் அடக்கம் இருக்க வேண்டும். ஒரு மொழியின் வார்த்தை மற்றும் இலக்கணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க கம்ப்யூட்டரில் புரோகிராம் செய்தனர். அதனால், தான் மருந்து கண்டுபிடித்து, அந்த நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மாணவர்கள் பல கலைகளில் ஆர்வமுடனும், அதில் ஒன்றில் ஆழமாகவும் இருக்க வேண்டும். 2020ம் ஆண்டில் இருந்து 'ஏ.ஐ.,' குறித்து தேடல் அதிகரித்துள்ளது. எங்கும், எதிலும் 'ஏ.ஐ.,' என வந்துவிட்டது என அதைப் படித்தால், வேலைக்காக வரிசையில் தான் நிற்க வேண்டும்.
இன்று எது 'டிரென்டிங்' என்பதை விட, நீங்கள் கல்லுாரி முடித்துவிட்டு வரும் போது மக்களுக்கு எது தேவை என்பதை முன் கணிப்பு செய்ய வேண்டும். நீங்கள் எதையாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். அக்கம், பக்கம் பார்த்து புரிந்து கொண்டு முன்னேற வேண்டும்.
கல்லுாரியில் பேராசிரியர்கள், கட்டமைப்புகளை விசாரிக்க வேண்டும். விளம்பரங்களை நம்புவதைவிட நேரடியாகச் சென்று பார்வையிட வேண்டும். ஏதாவது தெரியாதது இருந்தால் உலக அளவில் பிரமிப்பாக இருக்கும். எதையும் நாம் கற்றுக்கொண்டால் அது கை மண் அளவாகிவிடும்.
இவ்வாறு ராஜேந்திரன் தண்டபாணி பேசினார்.
