சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுபான்ஷு குழு இன்று பயணம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுபான்ஷு குழு இன்று பயணம்
UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM
ADDED : ஜூன் 25, 2025 08:25 AM
கேப் கேனவரல்:
ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4 என்ற திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழு, அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் வாயிலாக இன்று புறப்படுகிறது.
ஆராய்ச்சி
நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலமுறை இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.