தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சவால்களை மகிழ்வோடு ஏற்க சுதா சேஷய்யன் அறிவுரை

சவால்களை மகிழ்வோடு ஏற்க சுதா சேஷய்யன் அறிவுரை

சவால்களை மகிழ்வோடு ஏற்க சுதா சேஷய்யன் அறிவுரை


UPDATED : மார் 06, 2026 11:01 AM

ADDED : மார் 06, 2026 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2026 11:01 AM ADDED : மார் 06, 2026 11:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
“கடமையிலிருந்து பின்வாங்காமல், சவால்களை மகிழ்வோடு ஏற்று, எதையும் சாதிக்க வேண்டும,” என, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசினார்.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி ஆண்டு விழாவில், அவர் பேசுகையில், “மாணவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியம். கடமையிலிருந்து பின்வாங்காமல், சவால்களை மகிழ்வோடு ஏற்று, எதையும் சாதிக்க வேண்டும். நலமுடன் இருப்பதென்பது உடல், மனம், சமுதாயம், ஆன்மிகம் ஆகிய நான்கிலும் நலமுடன் இருப்பதை குறிக்கும்.

நேர மேலாண்மை மன அழுத்தத்தை குறைக்கும். புனிதம் நிறைந்த இந்தியாவில் பிறந்ததை நினைத்து பெருமைப்பட வேண்டும்,” என்றார்.

கல்லுாரி செயலர் வாசுகி தலைமை வகித்தார். முதல்வர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்கள், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சிறந்த ஆராய்ச்சி துறைக்கும் சுழற்கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us