UPDATED : மே 06, 2026 06:18 PM
ADDED : மே 06, 2026 06:20 PM

வில்லிவாக்கம்:
கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், சிறுவர்களுக்கான கலை பயிற்சி முகாம், வில்லிவாக்கத்தில் துவங்கியுள்ளது.
அரசு கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் இணைந்து, கோடைக் காலத்திற்கான கலை பயிற்சி முகாமை, வில்லிவாக்கம், சிவன் கோவில் வடக்கு மாட வீதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடத்துகின்றன.
இதில், சிலம்பம், பரதநாட்டியம், ஓவியம், யோகா, கீ போர்டு, நாடகம், டிரம்ஸ் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப் படுகின்றன.
முகாம் தினமும் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, இம்மாதம் 15ம் தேதி வரை நடைபெறும். இதில், 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். சேர்க்கை கட்டணம் 100 ரூபாய்.
ஒருவர் இரண்டு கலைகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம். முகாமில் சேர விரும்புவோர், நேரடியாக வந்து பதிவு செய்து கொள்ளலாம் என, ஒருங்கிணைப்பாளர் சையத் ஹமீத் தெரிவித்தார்.
