2025ல் இந்தியாவில் குவாட் மாநாடு: டிரம்ப் பங்கேற்பு?
2025ல் இந்தியாவில் குவாட் மாநாடு: டிரம்ப் பங்கேற்பு?
UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 03:07 PM
புதுடில்லி:
அடுத்த குவாட் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள டிரம்ப் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.
இந்தியா , அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த செப்டம்பரில் இந்த அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டன் மாகாணத்தின் டெல்வாரே நகரில் அதிபர் ஜோபைடன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதற்கு முன்னதாக 2023-ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் குவாட் மாநாடு நடைபெற்ற போது 2024-ம் ஆண்டு இந்தியாவில் டில்லியில் அடுத்த குவாட் மாநாடு நடத்தப்படும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் திடீரென அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் குவாட் அமைப்பின் அடுத்த மாநாடு இந்தியாவில் 2025ம் ஆண்டு செப்டம்பரில் டில்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். 2025 குவாட் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரவாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.