UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:
விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் பீமநாய்க்கன் தோப்பில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு, கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரகு தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார்.
மாணவர்கள் பயன்பாட்டிற்காக நாற்காலி, மேஜை மற்றும் பீரோ உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை, விழுப்புரம் சூர்யா புக் பார்க் நிர்வாக இயக்குநர் பொறியாளர் வினித் வழங்கினார். ஆசிரியர்கள் அப்துல் ஜப்பார், கிருஷ்ணன் உடனிருந்தனர்.