UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 09:58 AM
செஞ்சி:
செஞ்சி, சக்கராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஷேக் மூசா வரவேற்றார்.
செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், பயிற்சி நோட்டு, கல்வி உபகரணங்களை வழங்கினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், பேரூராட்சி துணை சேர்மன் ராஜலட்சுமி செயல்மணி, கவுன்சிலர்கள் நுார்ஜகான் ஜாபர், மகாலட்சுமி கமலநாதன், பொன்னம்பலம், சுமித்ரா சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.