'கல்வி நிறுவன ஹாஸ்டல்களில் இனி அதிரடி ஆய்வு நடக்கும்'
'கல்வி நிறுவன ஹாஸ்டல்களில் இனி அதிரடி ஆய்வு நடக்கும்'
UPDATED : ஆக 26, 2026 06:11 PM
ADDED : ஆக 26, 2026 06:13 PM
கோவை:
கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் விடுதி, கேன்டீன் நடத்தினால் அதற்கு பிரத்யேக உரிமம் பெற்றிருக்க வேண்டுமென, உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதற்காக தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் விடுதி நடத்துவோருக்கான பயிற்சி பட்டறை, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இத்துடன், அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், கட்டமைப்பு வசதி, சமையலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி, கழிவு மேலாண்மை, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றின் கீழ், 47 விஷயங்கள் குறிப்பிட்டு, சுய தணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
“இவற்றை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த இருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு உணவு ஆய்வு நிறுவனங்கள் சார்பிலும், ஆய்வு செய்யப்படும்.
இதில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தாதது தெரியவந்தால், அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுசார்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது,” என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
