சுசிலா, கவிஞர் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது
சுசிலா, கவிஞர் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது
UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:48 AM
சென்னை:
தமிழக அரசு சார்பில், கவிஞர் மேத்தா, பின்னணி பாடகி சுசிலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டது.
அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 2022 முதல் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படுகிறது. 2022ம் ஆண்டு 500 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி புகழ்பெற்ற ஆரூர்தாசுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு சிறப்பினமாக ஒரு பெண் திரை கலைஞருக்கும் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, 2023ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை விருதுகள் பெற, திரைப்பட பின்னணி பாடகி சுசிலா, சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் மு.மேத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு விருதுடன், தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, நினைவுப் பரிசு ஆகியவற்றை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.