UPDATED : அக் 23, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 10:16 PM

மத்திய அரசின் சுவயம் திட்டத்தில் வழங்கப்படும் 525 படிப்புகளுக்கான பருவத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்துகின்றன.
தேர்வு நடைபெறும் முறை:
கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இத்தேர்வுகளில் பொதுவாக கொள்குறி வகை கேள்விகள் இடம்பெறும். படிப்புகளை பொறுத்து, சில கேள்விகள் எழுத்து மற்றும் காகித வழியிலும் நடைபெறுகிறது. மொழி பாடங்களை தவிர, மற்ற அனைத்து பாடங்களுக்கான கேள்விகள் ஆங்கில மொழியில் கேட்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
https://swayam13.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
அக்டோபர் 31
தேர்வு நாட்கள்:
டிசம்பர் 7, 8, 14 மற்றும் 15
தேர்வு நேரம்:
3 மணி நேரங்கள். காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் என ஒவ்வொரு நாளும் இரண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன.
விபரங்களுக்கு:
https://exams.nta.ac.in/swayam