தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்க வேண்டும்; மோடி வலியுறுத்தல்

உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்க வேண்டும்; மோடி வலியுறுத்தல்

உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்க வேண்டும்; மோடி வலியுறுத்தல்


UPDATED : ஆக 24, 2026 10:38 AM

ADDED : ஆக 24, 2026 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2026 10:38 AM ADDED : ஆக 24, 2026 10:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இந்தியாவின் விண்வெளித்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியை பாராட்டிய பிரதமர் மோடி, “உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்கவும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும்,” என்றார்.

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு டில்லியில் விண்வெளித்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சி.இ.ஓ.,களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:


நீங்கள் ஒரு புதிய துறையில் திறமையையும், துணிச்சலையையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நாம் எடுக்கும் முடிவுகள் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

முடிவுகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது; அப்போது தான், ஆபத்துகளை எதிர்கொள்ளத் துணிபவர்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதி அளிக்கும். இந்தியாவின் விண்வெளித்துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி, உலகெங்கிலும் இருந்து திறமையாளர்களை ஈர்க்கவும், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும்.

நம் நாட்டு மக்களிடம் இயல்பாகவே ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறன் அதிகமாக இருப்பதால், இத்துறையில் நமக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் மிக விரைவாக உருவாக்கிக் கொள்ள முடியும். வழக்கமான பயன்பாடுகளுக்கு அப்பால் சிந்தித்து, தங்களின் தொழில்நுட்பங்கள் அன்றாட சவால்களை எதிர்கொள்ளவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும்.

ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் போதெல்லாம், சர்வதேச கவனம் இயல்பாகவே இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பக்கம் திரும்பும் நிலையை நாடு எட்ட வேண்டும். உலகம் இப்போது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும்,

இதில் யார் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்? என்று வியந்து கொண்டிருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள விண்வெளித்துறையைச் சேர்ந்தவர்கள், நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள்; இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணையுங்கள். இந்திய விண்வெளி நிறுவனங்களுடன் இணையுங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us