UPDATED : நவ 28, 2025 10:19 PM
ADDED : நவ 28, 2025 10:20 PM
தங்கவயல்:
தங்கவயலில் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மரபு நடனம், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதற்கான விழாவை தங்கவயல் நீதிமன்றம் அருகே, நேற்று காலை பெங்களூரு திருவள்ளுவர் மன்றத் தலைவர் எஸ்.டி.குமார் துவக்கி வைத்தார். தங்கவயலில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் வந்திருந்தனர். அனைவருமே தமிழ் குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பலரும் ஆங்கில வழிப் பள்ளியில் படிப்பவர்கள். அவர்களின் பெற்றோரும் வந்திருந்தனர்.
அதேபோல் மாறுவேட போட்டியில் திருவள்ளுவர், பாரதியார், அவ்வையார் போல் வேடம் அணிந்து வந்தனர். பாரதிதாசன் பாடல்களுக்கு நாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்தன. சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் பங்கேற்றார். விழா ஏற்பாடுகளை வெற்றி சீலன், கோவலன், சம்பத் குமார் அகஸ்டின், பாரத் ஆகியோர் செய்திருந்தனர்.

