தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் பாடத் தேர்வு எளிது பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் பாடத் தேர்வு எளிது பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் பாடத் தேர்வு எளிது பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி


UPDATED : மார் 12, 2026 06:31 PM

ADDED : மார் 12, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2026 06:31 PM ADDED : மார் 12, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்:
'தமிழ் பாடத் தேர்வு எளிதாக இருந்தது' என, பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நேற்று தமிழ் பாட தேர்வு நடந்தது.

அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலை, கே.ஜி., மெட்ரிக்., சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலை என மூன்று பள்ளிகளில் மையங்கள், தேர்வு நடத்தப்பட்டது.

கவியரசு, அன்னுார்:


மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியில் 15 கேள்விகள், இரண்டு மதிப்பெண் பகுதியில் 18 கேள்விகள், ஐந்து மதிப்பெண் பகுதியில் ஐந்து கேள்விகள், எட்டு மதிப்பெண் பகுதியில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. எளிதில் தேர்ச்சி பெறலாம். பல கேள்விகள் வகுப்பில் தெரிவித்தவை தான். அதிக மதிப்பெண் பெற முடியும்.

கிருஷ்ணா, மூக்கனுார்:


ஐந்து மதிப்பெண் கேள்வியில், மாவட்ட அளவில் நடந்த கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி கடிதம் எழுதுதல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை குறித்து மாநகராட்சி ஆணையருக்கு புகார் கடிதம் எழுதுதல் ஆகிய கேள்விகள் புதிதாக இருந்தன.

யோசித்து எழுத வேண்டி இருந்தது. இதே போல் தமிழ் மொழியின் சிறப்பு, கலைத் திருவிழாவுக்கு சென்று வந்த நிகழ்வுகளை கட்டுரையாக்குதல் என்னும் எட்டு மதிப்பெண் கேள்வியும் கடினமாக இருந்தது. மற்றவை எளிதாக இருந்தன. நல்ல மதிப்பெண் பெற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us