UPDATED : பிப் 20, 2025 12:00 AM
ADDED : பிப் 20, 2025 12:28 AM

கடந்த 2021-22ம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மொத்த சேர்க்கை விகிதத்தில், தமிழகம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் சிறந்த மாணவர் சேர்க்கை செயல்திறன் பெற்றுள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
'மாநிலங்கள் மற்றும் மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக தரமான உயர்கல்வியை விரிவுபடுத்துதல்' என்ற அந்த அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் மோசமான மாணவர் சேர்க்கை செயல்திறன் கொண்ட மாநிலங்களாக, சத்தீஸ்கர், நாகாலாந்து, ஜார்க்கண்ட் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்கள் பட்டியலிடப்படுள்ளன.
ஜி.இ.ஆர்., எனும் மொத்த மாணவர் சேர்க்கையில், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னணி பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழகம், கோவா மற்றும் கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்-ஆசிரியர் விகிதம் மிகக் குறைவாகவும், ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிக அதிகமாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.