தமிழ்நாடு நாள்: மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி அறிவிப்பு
தமிழ்நாடு நாள்: மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி அறிவிப்பு
UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM
ADDED : ஜூலை 08, 2024 09:15 AM
ஊட்டி:
நீலகிரியில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டப்படுவதால், மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி நடத்தப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு என முன்னாள் முதல்வர் அண்ணாவால், பெயர் சூட்டிய ஜூலை, 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், 6 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தி முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முறையே, 10 ஆயிரம், 7,000 மற்றும் 5,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும், 9ம் தேதி, காலை, 9:00 மணிக்கு போட்டிகள் நடைபெற உள்ளது. கட்டுரை போட்டி, ஆட்சி மொழி தமிழ் என்ற தலைப்பிலும், பேச்சு போட்டி, குமரி தந்தை மார்சல் நேசமணி, அண்ணா மற்றும் கருணாநிதி ஆகிய தலைப்புகளில் நடக்கிறது.
நீலகிரி மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இவ்விரு போட்டிகளில், தலா, 60 மாணவர்களை தேர்வு செய்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.