தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் புதிய படிப்பு துவக்கம்

UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 07:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
எலிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் செயலிழப்பை தடுக்க, பிளாஸ்மா அணுக்களை மாற்றி சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி படிப்பு, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் துவங்கப்பட்டுள்ளது.
இப்பல்கலையில், 45 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளன. ஆண்டுதோறும், 2,500 பேர் படிப்பை நிறைவு செய்கின்றனர்.
இதில், அவசரகால மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், கல்லுாரிக்கு கல்லுாரி வேறுபடுகின்றன.
இதை ஒழுங்குபடுத்தி சீராக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயிர் காக்கும் அடிப்படை சிகிச்சைகள், உயிர் காக்கும் மேம்பட்ட சிகிச்சைகள், சிறந்த ஆய்வக சேவைகள், சிறந்த மருத்துவ சேவைகள் ஆகிய நான்கு பிரிவுகளில், பல்கலை சார்பில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்தப்படும் ஒருங்கிணைந்த பயிற்சி திட்டத்தை, பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.
மேலும், பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான இணையதள கட்டமைப்பு துவங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி செயல்பாட்டில் மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும், ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதற்காகவும், மூன்று இணைய ஆய்விதழ்கள் துவங்கப்பட்டுள்ளன.
தொலைதுாரத்தில் உள்ளவர்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக, டிஜிட்டல் ஆரோக்கியம் இணையவழி சான்றிதழ் படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த படிப்பில், இளநிலை, முதுநிலை மாணவர்கள் சேரலாம்.
அதேபோல, எலிக்கொல்லியை உட்கொண்டவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பை தடுக்க, பிளாஸ்மா அணுக்களை மாற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான இணையவழி படிப்பையும் பல்கலை துவக்கி உள்ளது.