தமிழக விண்வெளி தொழில் வரைவு கொள்கை தென் மாவட்டங்களுக்கு சலுகைகள் ஏராளம்!
தமிழக விண்வெளி தொழில் வரைவு கொள்கை தென் மாவட்டங்களுக்கு சலுகைகள் ஏராளம்!
UPDATED : ஜூலை 02, 2024 12:00 AM
ADDED : ஜூலை 02, 2024 08:04 AM

சென்னை:
தமிழகத்தில் விண்வெளி தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு, அரசின் சார்பில் அளிக்க கூடிய சலுகைகள் அடங்கிய வரைவு தொழில் கொள்கையை, டிட்கோ நிறுவனம் நேற்றிரவு வெளியிட்டது.
சிறப்பம்சங்கள்:
இந்தாண்டு ஏப்., முதல், விண்வெளி துறையில் புதிய மற்றும் விரிவாக்க தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்.
ரூ.300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, மூலதன மானியம், சலுகை விலையில் நிலம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
ஏ பிரிவு (சென்னை மற்றும் அதை சுற்றிய நான்கு மாவட்டங்கள்):
ஐந்து சதவீத மூலதன மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
பி பிரிவு (கோவை, ஈரோடு உட்பட 12 மாவட்டங்கள்):
ஏழு சதவீதம் மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
சி பிரிவு (தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்கள்):
பத்து சதவீத மானியம், பத்து ஆண்டுகள் வழங்கப்படும்
டி பிரிவு (மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர்):
பத்து சதவீதம் மூலதன மானியம், ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
ஏ, பி பிரிவில் இடம்பெறும் மாவட்டங்களில் உள்ள, சிப்காட், சிட்கோ, டிட்கோ உள்ளிட்ட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்தால், நிலத்தின் மதிப்பில், 20 சதவீதம் சலுகை வழங்கப்படும்
சி, டி பிரிவில் உள்ள மாவட்டங்களில் தொழில் துவங்கினால், 50 சதவீதம் சலுகை விலையில் நிலம் வழங்கப்படும்.
நிலம் வாங்கும்போது, 100 சதவீத முத்திரை தாள் கட்டண தள்ளுபடி கிடைக்கும்; ஐந்து ஆண்டுகளுக்கு மின்சார வரியில் இருந்து, 100 சதவீத விலக்கு அளிக்கப்படும்
ஆலையில் சூரியசக்தி மின் நிலையம் உள்ளிட்ட பசுமை திட்டங்களை செயல்படுத்தும் மதிப்பில், 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஒருவருக்கு மாதம், 10,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 50 நபருக்கு பயிற்சி அளிக்க உதவி தொகை வழங்கப்படும்
வரைவு தொழில் கொள்கை குறித்து, தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கலாம். அவை, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதி கொள்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.