UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM
ADDED : ஜூன் 16, 2025 08:47 AM

 சென்னை:  
உலக அரங்கில் தமிழ் மொழி உலக மொழியாகப் பரிணமிக்க வேண்டும்,' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித் துணிக - பகுதி 18: உலகத் தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்னர் ரவி பேசியதாவது: 
உலகின் மிகப் பழமையான வாழும் மொழி தமிழ் ஆகும். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியில் அதன் இயல்பு சிதைந்தது. கல்வி, தொழில், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. தமிழ் ஒரு வெறும் மொழி மட்டுமல்ல, அது ஒரு ஆழமான பண்பாட்டு அடையாளம். ஆங்கிலக் கல்வி முறையால் சமூகக் கட்டமைப்பில் உருவான 'தாழ்வு உணர்வை' ஆங்கிலேயர்களே ஊட்டினார்கள்.
பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்! 
திருவள்ளுவரை ஷேக்ஸ்பியருடன் ஒப்பிடுவது தவறு. தாய்மொழி வழிக் கல்வியே எளிதானதும் ஆழமானது. 2023 ஆம் ஆண்டு தாம் தமிழ் கற்கத் தொடங்கிய பிறகு, பொறியியல் மற்றும் மருத்துவப் பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.
தமிழைப் பொழுதுபோக்காகக் கருதுவது போதாது; அதனை உலகளவில் பரப்ப வேண்டிய பணி இது. தமிழ் உலகிற்கு வழிகாட்டியாக மாற வேண்டும். தமிழ் ஒரு பொழுதுபோக்கிற்கான மொழி என்பதைத் தாண்டி, உலக அரங்கில் அது ஓர் உலக மொழியாகப் பரிணமிக்க வேண்டும். 
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

