UPDATED : மே 17, 2024 12:00 AM
ADDED : மே 17, 2024 08:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்:
திருப்புத்துாரில் தமிழ் வழி கல்வி இயக்க எட்டாவது மாநாடு குறித்த நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் தமிழ் வழிகல்வி இயக்கத்தின் எட்டாவது மாநாடு ஜூலையில் நடைபெறுகிறது. அதற்கான நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருப்புத்தூரில் நடந்தது.
வீ.ரத்தினம் தலைமை வகித்தார். ஜெயச்சந்திரன்வரவேற்றார். தி.க. மாவட்ட நிர்வாகி தனபால் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சந்தானகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார். கவிஞர் வைகை பிரபா, இயக்க மாவட்ட பொறுப்பாளர் தொல்காப்பியன், தலைவர் சி.சின்னப்பதமிழர், வக்கீல் குரு.பகத்சிங் பேசினர்.
தமிழ் வளர்ச்சிக்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.