2030க்குள் 500 ஜிகாவாட் பசுமை மின் இலக்கு: பிரல்ஹாத் ஜோஷி
2030க்குள் 500 ஜிகாவாட் பசுமை மின் இலக்கு: பிரல்ஹாத் ஜோஷி
UPDATED : அக் 31, 2025 04:58 PM
ADDED : அக் 31, 2025 05:00 PM

சென்னை:
2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற விண்டர்ஜி இந்தியா-2025 மாநாட்டில் அவர் பேசியதாவது:
நாட்டில் 100 ஜிகாவாட் மின்சாரம் காற்றாலை திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும். காற்றாலை உற்பத்தியில் உள்ளூர் உள்ளடக்கம் தற்போது 64 சதவீதமாக உள்ளது. அதை 85 சதவீதமாக உயர்த்த தொழில்துறை முன்வர வேண்டும்.
இந்தியா இன்று உலகின் நான்காவது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைக் கொண்ட நாடாக திகழ்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் நாட்டின் காற்றாலை திறனில் பாதியளவு பங்கு வகிக்கின்றன.
ராமநாதபுரம் கடற்கரையில் 500 மெகாவாட் கடற்கரை காற்றாலைத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. அதன் ஒப்பந்த அறிவிப்பு பிப்ரவரி 2026-க்குள் வெளியாகும். இந்த ஆண்டில் மட்டும் 3 ஜிகாவாட் காற்றாலை திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது மொத்த மின்சாரத்தின் 50 சதவீதம் புதைபடிவமற்ற ஆதாரங்களிலிருந்தே கிடைக்கிறது.
இவ்வாறு பேசினார்.

