காலை தொட்டு வணங்காததால் மாணவர்களை அடித்த 'டீச்சர்' சஸ்பெண்ட்
காலை தொட்டு வணங்காததால் மாணவர்களை அடித்த 'டீச்சர்' சஸ்பெண்ட்
UPDATED : செப் 17, 2025 12:00 AM
ADDED : செப் 17, 2025 09:19 AM
புவனேஸ்வர்:
ஒடிஷாவில், தன் கால்களை தொட்டு வணங்காத ஆத்திரத்தில் மாணவர்களை அடித்து துன்புறுத்திய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டம் பைசிங்கா என்ற இடத்தில், கண்டதேயுலா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு காலை பிரார்த்தனை அமர்வுக்குப் பின் மாணவ - மாணவியர் ஆசிரியர்களின் கால்களை தொட்டு வணங்கி மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் அந்தப் பள்ளியில் உதவி ஆசிரியராக உள்ள சுகந்தி கர் என்பவர் சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு தாமதமாக வந்தால், மாணவர்கள் அவரது கால்களை தொட்டு வணங்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளைச் சேர்ந்த 31 மாணவ - மாணவியரை மூங்கில் குச்சியால் அடித்தில் பலரின் கைகளிலும், முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன. ஒரு சிறுவனின் கையில் எலும்பு முறிந்தது.
ஒரு மாணவி மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த 2004 முதல், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உடல் ரீதியான தண்டனை வழங்க ஒடிஷா அரசு தடை செய்துள்ளது. அதை மீறி மாணவர்களை அடித்து துன்புறுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

