UPDATED : ஆக 12, 2025 12:00 AM
ADDED : ஆக 12, 2025 09:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தர கன்னடா:
அரசு பள்ளி மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரின் கலகனகொப்பா அரசு பள்ளி ஆசிரியை பாரதி நாயக். நேற்று முன்தினம், பாரதி பிரம்பால் அடித்ததில், இரண்டாம் வகுப்பு மாணவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
முதுகில் உள்ள காயத்தை பார்த்து கோபமடைந்த பெற்றோர், பள்ளியில் வந்து முறையிட்டனர். ஆசிரியை மன்னிப்புக் கேட்டார். ஆனாலும், போலீசில் புகார் அளித்தனர். நேற்று ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

