UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 10:23 AM
தேவகோட்டை:
தேவகோட்டையில் சிவகங்கை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், மகளிருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் நல்ல திட்டம். சொட்டு நீர் பாசனமாம். பொருளாதார மேதை கார்த்தி சொல்கிறார். திட்டத்தின் அருமை உங்களுக்கு தெரியலை என்கிறார் .போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பிள்ளைகளுக்கு தேவையான ஆசிரியர்கள் இல்லை. படித்த நர்சுகளுக்கு வேலை தரவில்லை. படித்து அரசு தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலை இல்லை. இலவச பயணத்தால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது. பென்ஷன் பணம் வாங்க முடியாமல் தொழிலாளர் அலைகின்றனர்.
தந்தையும் மகனும் எட்டு முறை எம்.பி.யாக இருந்து மாநிலத்திற்காக என்ன குரல் கொடுத்தார்கள். காவிரி தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் தான் பாயுதா. காவிரிக்காக குரல் கொடுத்தீர்களா. வேட்டி கட்டிய தமிழர் தொகுதிக்காக என்ன செய்தார்.
செத்துப் போன காங்கிரசை தி.மு.க., துாக்கிகிட்டு வருகிறார்கள். ஒன்னுமே செய்யலைன்னு கார்த்தியை கேட்காதீங்க. தி.மு.க.காரங்களை மறித்து என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள். மித்ராவயலில் பெண்கள் பொங்கி எழுந்துள்ளனர். கேள்வி கேட்டு உள்ளனர் என்றார்.