sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் எஸ்கலேட்டர் போன்றவர்கள்: குன்றக்குடி அடிகளார்

ஆசிரியர்கள் எஸ்கலேட்டர் போன்றவர்கள்: குன்றக்குடி அடிகளார்

ஆசிரியர்கள் எஸ்கலேட்டர் போன்றவர்கள்: குன்றக்குடி அடிகளார்


UPDATED : ஜன 16, 2025 12:00 AM

ADDED : ஜன 16, 2025 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2025 12:00 AM ADDED : ஜன 16, 2025 11:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பாலை:
திருப்பாலை மதுரை பப்ளிக் பள்ளி ஆண்டு விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடந்தது. தாளாளர் நாச்சியப்பன், இயக்குனர்கள் ஆதிமூலராஜன், முத்தையா, ஈஸ்வரி முன்னிலை வகித்தனர்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், ''ஆசிரியர், பெற்றோரை மதிப்பதுடன், சமுதாயத்தை மாணவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் 'எஸ்கலேட்டர்' போன்றவர்கள். மாணவர்களையும் சமுதாயத்தையும் மேம்படுத்துவதுடன் தாங்களும் வளர்ச்சியடைய வேண்டும். விவேகானந்தர் சிகாகோ சென்று நாடு திரும்பிய பின் அந்நாட்டு மக்களுடன் ஒப்பிட்டு 'தாழ்ந்துள்ள நம் மக்களை உயர்த்த ஒரே வழி கல்வியே' என பேசினார். வள்ளுவர் கூற்றுப்படி கற்ற பின் அவ்வழி நடந்தால் தான் சமுதாயம் மேம்படும்'' என்றார்.

தியாகராஜர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் பிரகாஷ், முதல்வர்கள் கவுரி, ஜெயந்தி, ஆசிரியர்கள், பெற்றோர், மதுரை மீனாட்சி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us