UPDATED : ஜன 06, 2026 06:50 PM
ADDED : ஜன 06, 2026 06:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வழங்காமல் ஏமாற்றியதை கண்டித்து, திண்டுக்கல் பழநி ரோட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ரத்தினவேல் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழுச் செயலாளர் சேவியர் பால்ராஜ் பேசினார். வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜூப்லிஷகிலா, லியோ கணேசபெருமாள், முருகேசன், கார்த்திகா பேசினர். மேலும் இந்த போராட்டத்தில் 800 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

