UPDATED : ஆக 15, 2024 12:00 AM
ADDED : ஆக 15, 2024 10:49 AM

மதுரை :
ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநில அளவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்' என தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க மாநிலத் தலைவர் முரளிதரன் கூறினார்.
இச்சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது. பொதுச் செயலாளர் பர்வதராஜன் முன்னிலை வகித்தார்.
தலைமை வகித்த முரளிதரன் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டம், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி செப்.,3ல் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றார்.
அனைவருக்கும் 80 வயது துவக்கத்திலேயே ஓய்வூதியத் தொகையை 20 சதவீதம் உயர்த்தி வழங்கவும், கேரளா வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு சங்கம் சார்பில் நிதியுதவி அளிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன், அப்துல் ரஹீம், பொருளாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டனர். மாநில துணை பொதுச் செயலாளர் மனோகர ஜஸ்டஸ் நன்றி கூறினார்.