அகவிலைப்படி உயர்வை உடன் வழங்க வேண்டும் : ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
அகவிலைப்படி உயர்வை உடன் வழங்க வேண்டும் : ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்
UPDATED : நவ 01, 2025 07:02 AM
ADDED : நவ 01, 2025 07:04 AM
மதுரை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கும் உடன் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகநாதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசு இந்தாண்டு ஜூலை 1 முதல் தனது ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளது. வழக்கமாக மத்திய அரசு அறிவித்தவுடன் அகவிலைப்படியை மாநில அரசு அறிவித்து வந்தது. ஆனால் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதை கருத்தில்கொண்டு மாநிலத்தில் உள்ள 16 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர் பயன்பெறும் வகையில் நிலுவையுடன் கூடிய அகவிலலைப்படி உயர்வை உடன் வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அவருக்கு மனுவும் அனுப்பப் பட்டுள்ளது என்றார்.

