தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுமுறை நாட்களிலும் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

விடுமுறை நாட்களிலும் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

விடுமுறை நாட்களிலும் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


UPDATED : ஜன 17, 2026 10:39 AM

ADDED : ஜன 17, 2026 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2026 10:39 AM ADDED : ஜன 17, 2026 10:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி பொங்கல் விடுமுறை நாட்களிலும் கலெக்டர் அலுவலம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஜன.,5 முதல் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் (ஜன.,15) பொங்கல் அன்று ஒரு நாளை தவிர்த்து மீண்டும் நேற்று முதல் கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மிகக் குறைவான அடிப்படை ஊதியம் ரூ.20,600 கூட வழங்கப்படாமல் 16 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுள்ளோம். எதிர் கட்சியாக இருக்கும் போது இரு முறை போராட்டத்திற்கு நேரில் ஆதரவு அளித்து ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு தற்போது ஏமாற்றி வருகிறது.

'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களில் சிலர் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us