UPDATED : ஜன 01, 2025 12:00 AM
ADDED : ஜன 01, 2025 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் நியமிக்கப்பட்ட பள்ளி, அலுவலகங்களில் கே.எச்., என்ற கணக்கு எண்ணின் கீழ் சம்பளம் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை சி.இ.ஓ., ரேணுகா சார்பில் டிச.27 ல் நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில், சார்நிலை கருவூலங்களில் இக்கணக்கின் கீழ் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் சம்பள பட்டியலை வாங்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.
இப்பிரிவு ஆசிரியர், அலுவலர்களும் வரும் ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் சம்பளம் வழங்க கல்வித்துறைநடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகம் மாவட்ட தலைவர் கணேசன் வலியுறுத்தியுள்ளார்.