தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் கற்பித்தல் பயிற்சி

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் கற்பித்தல் பயிற்சி

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் கற்பித்தல் பயிற்சி


UPDATED : மே 30, 2026 10:03 AM

ADDED : மே 30, 2026 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2026 10:03 AM ADDED : மே 30, 2026 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தை மையக் கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் விதமாக, கதைகள், பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் வாயிலாக கற்கும் வகையில் இந்தப் பாடநுால்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் உடல் இயக்கத் திறன், சமூக மற்றும் மனவெழுச்சித் திறன், விழுமியங்கள், வாழ்க்கைத்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடப்பொருட்களுடன், அழகிய வண்ண வடிவமைப்பில் ஒன்பது பாடநுால்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதிய பாடநூல்களின் கற்பித்தல் நுட்பங்கள் தொடர்பான பயிற்சி, ஜூன் 1, 2 மற்றும் 3 தேதிகளில் வழங்கப்பட உள்ளது. இதில் அனைத்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us