UPDATED : ஆக 22, 2025 12:00 AM
ADDED : ஆக 22, 2025 08:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஆசிய அளவிலான தொழில்நுட்ப திறன் போட்டிகள், நவம்பரில் தைவான் நாட்டின், தைபே நகரில் நடக்க உள்ளன. அதேபோல், உலக திறன் போட்டிகள், 2026 செப்டம்பரில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்க உள்ளன.
இப்போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள மாணவ - மாணவியரை தேர்வு செய்வதற்காக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை சார்பில், 'திறன் இந்தியா' என்ற தலைப்பில், தொழில்நுட்ப திறன் போட்டிகள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்தப்பட உள்ளன.
கட்டட கலைத் துறையில் படைப்பாற்றல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் திறன் படைத்த மாணவர்கள், www.skillindiadigital.gov.in இணையதளத்தில், செப்டம்பர் மாதம் 30க்குள் பதிவு செய்யலாம்.

