UPDATED : ஜூலை 05, 2026 11:28 AM
ADDED : ஜூலை 05, 2026 11:29 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில், 47 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழக அரசு, நிதியுதவி, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கான தகுதி தேர்வு (டெட்) மாநிலம் முழுவதும் நடந்தது.
ஈரோடு சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலை பள்ளி, செங்குந்தர் மேல்நிலை பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், காமராஜ் மாநகராட்சி மேல்நிலை பள்ளி, கார்மல் பள்ளி, ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளி என மாவட்டத்தில் ஆறு மையங்களில், நேற்று தேர்வு - 1 நடந்தது.
30 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 1,876 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 47 பேர் ஆப்சென்ட் ஆகினர். 1,829 பேர் தேர்வெழுதினர். நாளை தேர்வு தாள் - 2, 20 மையங்களில் நடக்கிறது. இதற்கு, 5,311 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
