டெட் இரண்டாம் தாள் தேர்வு கடினம்: ஆசிரியர்கள் கவலை
டெட் இரண்டாம் தாள் தேர்வு கடினம்: ஆசிரியர்கள் கவலை
UPDATED : ஜூலை 06, 2026 10:18 AM
ADDED : ஜூலை 06, 2026 10:19 AM

சென்னை:
நாடு முழுதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு 'டெட்' நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, மாநிலம் முழுதும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு, 'டெட்' தேர்வு, நேற்றும், நேற்று முன்தினமும் நடந்தது. நேற்று முன்தினம், இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது.
இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, இரண்டாம் தாள் தேர்வு, 613 மையங்களில் நேற்று நடந்தது; 1 லட்சத்து, 60,929 பேர் எழுதினர்.
இரண்டாம் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும், கவலை தெரிவித்துள்ளனர்.
