UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 10:08 AM
பாலக்காடு:
பாலக்காடு ஆர்.பி., கூடம் அரசு நடுநிலைப்பள்ளியின், 133வது ஆண்டு விழா வரும் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு நெய்க்காரத் தெருவில் உள்ளது ஆர்.பி. கூடம் அரசு நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியின், 133-வது ஆண்டு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.
அன்று மதியம், 2:30 மணிக்கு விழாவை, பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டன் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் பிரமிளா கலந்து கொள்கிறார். எட்டாம் அறிவு என்ற அமைப்பில் பொதுச்செயலாளர் சரவணகுமார் பேசுகிறார். பொள்ளாச்சி தமிழிசை சங்கம் செயலாளர் சண்முகம், பாலக்காடு நகராட்சி கவுன்சிலர் சிவராஜன், உடற்கல்வி ஆசிரியர் மனோஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஜோயல் அமல்தாஸ், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ஐயப்பராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.