மும்மொழி கொள்கைக்கு எதிராக இண்டி கூட்டணியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
மும்மொழி கொள்கைக்கு எதிராக இண்டி கூட்டணியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
UPDATED : பிப் 19, 2025 12:00 AM
ADDED : பிப் 19, 2025 09:04 AM
சென்னை:
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இண்டி கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்மொழி கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன. தமிழகத்தில் மட்டும் அதை வைத்து அரசியல் செய்கின்றனர். சட்டப்படி மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (பிப்.18) சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இண்டி கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, வைகோ, பெ.சண்முகம், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

