தரமான கல்வி கிடைக்க செய்வதே அரசின் தலையாய கடமை: சொல்கிறார் ராகுல்
தரமான கல்வி கிடைக்க செய்வதே அரசின் தலையாய கடமை: சொல்கிறார் ராகுல்
UPDATED : ஜன 06, 2025 12:00 AM
ADDED : ஜன 06, 2025 05:50 PM
புதுடில்லி:
தனது மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமை என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, சென்னை ஐஐடி மாணவர்கள் சந்தித்தனர். அப்போது, கல்வி, திறன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.
அப்போது திறமை என்பதற்கான வரையறை குறித்து ராகுல் அளித்த விளக்கம்: ஒருவர் தன்னை சுற்றி நடப்பதையும், தன்னைச்சுற்றி உள்ள சூழ்ச்சிகளை துல்லியமாக கவனிப்பதையே திறமை என நான் கருதுகிறேன். பயம், பேராசை மற்றும் கோபத்தை கையாள்வது இதில் அடங்கும் என்றார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
தனது மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமை என நான் நம்புகிறேன். இதனை தனியார் மயம் மூலம் அல்லது நிதியுதவி மூலம் செய்ய முடியாது. கல்விக்கும், அரசு அமைப்புகளை வலிமைப்படுத்துவதற்கும் நாம் நிறைய செலவு செய்ய வேண்டும்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.